ஹெமிபிலோடாக்டைலஸ் கோயென்சிஸ் (Hemiphyllodactylus goaensis) எனும் ஒரு சிறிய மெல்லிய மரபல்லி இனமானது கோவா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் வடக்குப் பகுதியில் புதியதாக கண்டறியப்பட்ட ஒரு இனமாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது “A New Species of genus Hemiphyllodactylus Bleeker, 1860” என்ற தலைப்பில் zootaxa என்ற ஒரு விலங்கியல் இதழில் வெளியிடப்பட்டது.
இந்த மெல்லிய மரபல்லி இனமானது இந்தியாவின் மிகச்சிறிய இனங்களுள் ஒன்றாகும்.
இது மனிதனின் கட்டை விரலில் அமரக் கூடிய வகையில் 32 மி.மீ. அளவிலானதாகும்.
ஹெமிபிலோடாக்டைலஸ் கோயென்சிஸ் இனமானது இந்த இனத்தின் 8வது இந்திய இனமும் உலகளவில் 44வது இனமும் ஆகும்.
கோவா பல்கலைக்கழகத்தில் விவரிக்கப்பட்ட முதல் விலங்கினமும் இதுவேயாகும்.