மே 01 ஆம் தேதியானது சர்வதேசத் தொழிலாளர் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.இது மே தினம் என்றும் அழைக்கப்படுகின்றது.
இத்தினமானது தொழிலாளர்கள் மற்றும் பணிக்குச் செல்வோர்களை கொண்டாடுகிறது.
இந்தியாவில் முதலாவது தொழிலாளர் தினமானது எம். சிங்காரவேலர் என்பவரால் சென்னையில் 1923 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
இந்தியாவின் முதலாவது வர்த்தகக் கூட்டிணைவைச் சிங்காரவேலர் தொடங்கினார்.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கியவர்களில் சிங்காரவேலரும் ஒருவராவார்.
வரலாறு
தொழிலாளர் தினமானது அமெரிக்காவின் தொழிலாளர் கூட்டிணைவு இயக்கத்தின் போது தோற்றுவிக்கப்பட்டது.
1886 ஆம் ஆண்டு மே 01 அன்று சிகாகோ நகரில் நடைபெற்ற ஹேமார்க்கெட் விவகாரத்தை நினைவு கூறுவதற்காக மே 01 ஆம் தேதி சர்வதேசத் தொழிலாளர்கள் தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நாளில் ஒரு நாளில் 15 மணி நேரத்திற்கு பதிலாக 8 மணி நேரத்தை பணி நேரமாக வேண்டி பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது.
சிகாகோ காவல் துறையானது அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தி பலரைக் கொன்றது.