வேஷாக் புத்தத் திருவிழாவோடு (Buddhist festival of Vesak) மே தின நிகழ்ச்சிகள் இடைப்படுவதைத் தவிர்ப்பதற்காக, மே 1 ஆம் தேதியின் சர்வதேச தொழிலாளர் தின நிகழ்ச்சிகளை (International Workers’ Day events) காலந்தள்ளி (Postpone) மே 7 அன்று கொண்டாட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கையில் உள்ள புத்த பிக்குகளின் (Buddhist clergy) செல்வாக்குடைய அமைப்பான மஹா சங்கா (Maha Sangha) அமைப்பினுடைய கோரிக்கையினைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புத்த பூர்ணிமா (Buddha Purnima’) அல்லது புத்த ஜெயந்தி (Buddha Jayanti) எனப்படும் வேஷாக் திருவிழா தினமானது புத்தரின் பிறப்பு, அறிவொளி பெறல் (enlightenment) மற்றும் இறப்பை நினைவு கூர்வதற்காக கொண்டாடப்படுகின்றது.
சிங்களர்களின் நாட்காட்டியின்படி (Sinhalese calendar), பெரும்பாலும் மே மாதத்தில் வேஷாக் வாரம் அமையும். ஆனால் இவ்வாண்டு இவ்வாரமானது ஏப்ரல்- 29 மற்றும் 30-ஆம் தேதிகளில் தொடங்குகிறது.