கடந்த மாதம் அரசாங்கத்தினால் தொடங்கப்பட்ட மௌசம் திட்டம் ஆனது, நாட்டில் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்தச் செய்வதை மட்டுமல்லாமல், சில வானிலை நிகழ்வுகளை மேலாண்மை செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தில் (IITM) இந்தியா இத்தகைய வகையிலான முதல் மேக உருவாக்க ஆய்வுக் கட்டமைப்பினை (அறை) நிறுவுகிறது.
ஒரு மேக அறையானது மூடிய உருளை அல்லது குழாய் வடிவ குவளை போன்றது என்பதோடு இதனுள்ளே நீராவி, தூசிப் படலங்கள் போன்றவை உட்செலுத்தப் படச் செய்கின்றன.
இந்த அறைக்குள் தேவையான ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையின் கீழ், ஒரு மேகம் உருவாக இயலும்.
மேகத் துளிகள் அல்லது பனித் துகள்களை உருவாக்கும் சில தூண்டுதல் துகள்களை அறிவியலாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்ய இந்த வசதி வழி வகுக்கும்.
இந்தியப் பருவக்காற்று மேகங்களைப் பற்றி நன்கு ஆய்வு செய்வதற்குத் தேவையான, வெப்பச்சலன பண்புகளைக் கொண்ட மேக அறையை இந்தியா உருவாக்கி வருகிறது.