கான்பூரின் இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகமானது (IITK) மேக விதைப்புத் தொழில் நுட்பத்திற்கான ஒரு சோதனை ஓட்டத்தினை மேற்கொண்டது.
வறண்ட நிலை மற்றும் காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராட உதவும் மழைக்கான உகந்தச் சூழ்நிலையை உருவாக்க உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேக விதைப்புத் தொழில்நுட்பம் என்பது சில்வர் அயோடைடு, உலர் பனிக்கட்டி, சாதாரண உப்பு மற்றும் பிற தனிமங்கள் போன்ற பல்வேறு இரசாயன காரணிகளைப் பயன்படுத்தி மழைப் பொழிவிற்கான வாய்ப்பினை அதிகரிக்கும் நோக்கத்துடன் மேற் கொள்ளப் படுகிறது.