TNPSC Thervupettagam

மேகாங் – கங்கா ஒத்துழைப்பு அமைப்பு

August 9 , 2017 2716 days 1142 0
  • மேகாங் – கங்கா ஒத்துழைப்பு அமைப்பின் அமைச்சர்கள் சந்திப்பு , பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலா நகரில் நடைபெற்றது.
  • மேகாங் – கங்கா ஒத்துழைப்பு நாடுகளுக்கு இடையே சுற்றுச்சூழல், கலாச்சாரம், கல்வி, போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு போன்ற பகுதிகளில் ஒத்துழைப்புக்கான புதிய அம்சங்களைச் சேர்க்க முன்மொழியப்பட்டது.
  • மேகாங் – கங்கா ஒத்துழைப்பு அமைப்பு
  • தொடங்கப்பட்ட வருடம் : நவம்பர் 10 , 2000.
  • இடம் : வியன்டியன் நகரம் (லாவோஸ்).
  • உறுப்பினர் நாடுகள்: இந்தியா, தாய்லாந்து, மியான்மர், கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்நாம்.
  • ஒத்துழைப்புக்கு முனையும் துறைகள் : சுற்றுலா, கலாச்சாரம், கல்வி, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு.
  • ஆண்டுதோறும் சந்திக்கும் பணிக்குழுக்கள்:
    • வருடாந்திர அமைச்சர் சபை சந்திப்பு
    • மூத்த அதிகாரிகளின் சந்திப்பு
    • சுற்றுலா பணிக்குழு (குழுவின் தலைமை: தாய்லாந்து)
    • கல்விப் பணிக்குழு (மனிதவளமேம்பாடு) [குழுவின் தலைமை : இந்தியா ]
    • கலாச்சாரப் பணிக்குழு (குழுவின் தலைமை :கம்போடியா)
    • தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து பணிக்குழு (குழுவின் தலைமை :லாவோஸ் மக்கள் ஜனநாயக குடியரசு)
    • செயல்திட்டப் பணிக்குழு (குழுவின் தலைமை : வியட்நாம்)
  • இப்பகுதியில் கங்கை மற்றும் மீகாங் ஆகிய இரண்டு பெரிய ஆறுகள் அமைந்திருப்பதால் இந்த அமைப்பு இப்பெயர் பெறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்