TNPSC Thervupettagam

மேகாலயா - நீர் பாதுகாப்புக் கொள்கை

July 15 , 2019 1834 days 605 0
  • இந்தியாவில் நீர் பாதுகாப்பை உறுதி செய்ய தனக்கென சொந்தமான நீர் கொள்கையைக் கொண்டுள்ள முதல் மாநிலமாக மேகாலயா ஆகியுள்ளது.
  • நீர்வளங்களைப் பொதுவான வளங்களாக அங்கீகரித்தல், வீட்டு உபயோகம் மற்றும் சுகாதாரப் பயன்பாட்டிற்கு மாநிலத்தின் குடிமக்கள் அனைவருக்கும் தூய்மையான மற்றும் பாதுகாப்பான நீரை வழங்குதல் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவை இந்தக் கொள்கையின் நோக்கங்களாகும்.
  • நீர் ஆதாரங்களின் அளவு மற்றும் தரம் குறைவதைத் தடுக்க அனைத்து நீர் ஆதாரங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்