TNPSC Thervupettagam

மேகாலயாவில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல்

August 24 , 2020 1464 days 561 0
  • ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலானது, மேகாலயாவிற்குப் பரவியுள்ளது. இங்கு அஸ்ஸாமைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் தொற்று நோய் பரவியதன் காரணமாக ஏறத்தாழ 17,000 பன்றிகள் இறந்துள்ளன.
  • இது வளர்ப்பு மற்றும் வனப் பன்றிகளைத் தாக்கும் ஒரு கொடிய மற்றும் தொற்றும் தன்மையுள்ள ஹெமொர்ஹஜிக் வைரஸ் நோயாகும்.
  • இந்த நோயானது முதன்முதலில் 1909 ஆம் ஆண்டில் கென்யாவில் கண்டறியப் பட்டது.  அதன் பின்னர் ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் இது கண்டறிய ப்பட்டது.
  • உலக விலங்குச் சுகாதார அமைப்பின் படி, இந்நோயானது ஆஸ்பாவிரிடே எனும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை டிஎன்ஏ வைரஸினால் அதிக அளவில் ஏற்படுகின்றது.
  • இந்த வைரசானது உண்ணிகளின் மூலம் பரவுகின்றது. இது தொற்றுள்ள பன்றிகள், மலம் மற்றும் உடல் திரவங்கள் ஆகியவற்றுடன் நேரடியாக அல்லது மறைமுகமாக ஏற்படும் தொடர்பின் மூலம் பரவுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்