TNPSC Thervupettagam

மேடாராம் ஜடாரா

January 10 , 2018 2540 days 922 0
  • சம்மக்கா சராக்கா அல்லது சரலம்மா ஜடாரா என்றழைக்கப்படும் மேடாராம் பகுதியில் நடைபெறும் பழங்குடியினத் திருவிழாவை இந்த ஆண்டு தேசியத் திருவிழாவாக மத்திய அரசு அறிவிக்க உள்ளது.
  • ஆசியாவின் மிகப்பெரிய பழங்குடியினத் திருவிழாவான (Tribal Festival) சம்மக்கா-சரக்கா ஜடாரா திருவிழாவானது தெலுங்கானா மற்றும் தெலுங்கானாவைச் சுற்றியுள்ள பிற மாநிலங்களிலுள்ள வனவாழ் பழங்குடியினரான கோயா இன (Koya tribe) மக்களால் கொண்டாடப்படுகின்றது.
  • ஜடாரா திருவிழாவானது கோயா பழங்குடியினரின் இரு பெண் கடவுள்களான சம்மக்கா மற்றும் அக்கடவுளின் மகளான சரக்காவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வருடத்திற்கு இரு முறை கொண்டாடப்படுகின்றது.
  • தேசியத் திருவிழாவாக ஒருமுறை அறிவிக்கப்பட்டால் ஜடாரா திருவிழாவை யுனெஸ்கோவினுடைய மனித குலத்தின் தொட்டுணர முடியாத கலாச்சாரப் பாரம்பரியமாகக் (UNESCO’s Intangible Cultural Heritage of Humanity) கருத இயலும்.
  • தக்காணத்தில் மிகப்பெரிய உயிரோட்டமுள்ள வனப் பகுதியான தண்டகாரண்யாவின் ஒரு பகுதியாக, எடுர் நாகாராம் வனவுயிர் சரணாலயத்தில் உள்ள தொலைதூரப் பகுதியே (Remote) மேடாராம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்