சம்மக்கா சராக்கா அல்லது சரலம்மா ஜடாரா என்றழைக்கப்படும் மேடாராம் பகுதியில் நடைபெறும் பழங்குடியினத் திருவிழாவை இந்த ஆண்டு தேசியத் திருவிழாவாக மத்திய அரசு அறிவிக்க உள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய பழங்குடியினத் திருவிழாவான (Tribal Festival) சம்மக்கா-சரக்கா ஜடாரா திருவிழாவானது தெலுங்கானா மற்றும் தெலுங்கானாவைச் சுற்றியுள்ள பிற மாநிலங்களிலுள்ள வனவாழ் பழங்குடியினரான கோயா இன (Koya tribe) மக்களால் கொண்டாடப்படுகின்றது.
ஜடாரா திருவிழாவானது கோயா பழங்குடியினரின் இரு பெண் கடவுள்களான சம்மக்கா மற்றும் அக்கடவுளின் மகளான சரக்காவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வருடத்திற்கு இரு முறை கொண்டாடப்படுகின்றது.
தேசியத் திருவிழாவாக ஒருமுறை அறிவிக்கப்பட்டால் ஜடாரா திருவிழாவை யுனெஸ்கோவினுடைய மனித குலத்தின் தொட்டுணர முடியாத கலாச்சாரப் பாரம்பரியமாகக் (UNESCO’s Intangible Cultural Heritage of Humanity) கருத இயலும்.
தக்காணத்தில் மிகப்பெரிய உயிரோட்டமுள்ள வனப் பகுதியான தண்டகாரண்யாவின் ஒரு பகுதியாக, எடுர் நாகாராம் வனவுயிர் சரணாலயத்தில் உள்ள தொலைதூரப் பகுதியே (Remote) மேடாராம் ஆகும்.