காவிரி டெல்டா பகுதி பாசனத்திற்காக திறக்கப்படும் சேலத்தில் உள்ள மேட்டூர் அணை வழக்கமான தேதியான ஜூன் 12 ஆம் தேதியன்று திறக்கப்படவில்லை.
கடந்த ஐந்தாண்டுகளில் வழக்கமான தேதி தவறியது இதுவே முதல் முறையாகும்.
அணையின் நீர் மட்டமானது, அதன் முழுக் கொள்ளளவான 93.47 ஆயிரம் மில்லியன் கன அடிக்கு மாறாக 13.97 ஆயிரம் மில்லியன் கன அடி மட்டுமே உள்ள காரணத்தினால் இந்த ஆண்டு அணை திறக்கப்படவில்லை.
நீர்மட்டம் ஆனது அதன் முழு கொள்ளளவான 120 அடிக்கு மாறாக 43.52 அடியாக உள்ளது.
அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 404 கனஅடியாகவும் (cusecs), நீர் வெளியேற்றம் 1,500 கன அடியாகவும் இருந்தது.
பொதுவாக, குறுவை சாகுபடி பருவத்தில் 3.24 லட்சம் ஏக்கர் பாசனத்திற்காக மேட்டூரில் இருந்து நீர் திறக்கப்படும்.
ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில், 2019-20 ஆம் ஆண்டில் பாசனப் பரப்பானது 2.9 லட்சம் ஏக்கர் பரப்பிற்கு மாறாக 5.6 லட்சம் ஏக்கர் பரப்பளவாக உயர்ந்துள்ளது.