அறிவியலாளர்கள் சமீபத்தில் ஒன்பதாவது வகையான எறும்புத் திண்ணிகளை (பாங்கோலின்) கண்டுபிடித்து, அதற்குத் தற்காலிகமாக "மேனிஸ் மிஸ்டீரியா" என்று பெயரிட்டுள்ளனர்.
எறும்புத் திண்ணிகள் மேனிடே குடும்பத்தினைச் சேர்ந்த பாலூட்டிகள் மற்றும் ஃபோலிடோட்டா எனப்படும் ஒற்றை வகை உயிரலகினைச் சேர்ந்தவை ஆகும்.
எட்டு வகையான எறும்புத் திண்ணிகள் தற்போது வரை அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
நான்கு ஆசிய எறும்புத் திண்ணிகள் மேனிஸ் இனத்தைச் சேர்ந்தவை மற்றும் நான்கு ஆப்பிரிக்க எறும்புத் திண்ணிகள் ஃபேடஜினஸ் மற்றும் ஸ்முட்சியா வகையைச் சேர்ந்தவை ஆகும்.
இந்தப் புதிய இனமானது அதன் பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா இனங்களிடமிருந்து சுமார் ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்ததாக நம்பப்படுகிறது.