“விண்வெளிப் பொருட்கள்” என்ற புத்தகத்திற்காக மேன்புக்கர் சர்வதேச விருதை ஓமனைச் சேர்ந்த எழுத்தாளரான ஜோகா அல்ஹார்தி என்பவர் வென்றுள்ளார்.
இந்த நாவலானது “நிலவின் பெண்மணிகள்” என்ற புத்தகமாக 2010 ஆம் ஆண்டில் முதன்முதலில் வெளியிடப்பட்டது.
இந்த விருதைப் பெறும் முதல் அராபிய மொழி எழுத்தாளர் இவராவார்.
மேன்புக்கர் சர்வதேசப் பரிசு என்பது தி மேன் குழுமத்தினால் வழங்கப்படும் ஒரு சர்வதேச இலக்கிய விருதாகும்.
இந்த விருதானது 50,000 பவுண்டுகள் அல்லது 64,000 அமெரிக்க டாலர்கள் என்ற நிதித் தொகையைக் கொண்டிருக்கும். இது வெற்றி பெற்ற படைப்பிற்கு வழங்கப்படும். இந்த விருதானது எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆகியோர்களுக்கிடையே சரிசமமாகப் பகிர்ந்து கொள்ளப்படும்.
ஐக்கிய இராஜ்ஜியத்தைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளரான மாரிலின் பூத் என்பவருடன் ஜோக் அல்ஹார்தி இந்த விருதைப் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றார்.
புனைவுக் கதைக்கான மேன்புக்கர் பரிசானது இதே குழுமத்தினால் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது.