TNPSC Thervupettagam

மேம்படுத்தப் பட்ட வேதி செல் ஆற்றல் சேமிப்புக்கான தேசியத் திட்டம்

September 21 , 2022 671 days 335 0
  • மேம்படுத்தப் பட்ட வேதி செல் மின்கல அடுக்குகள் துறையில் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலப் போக்குகள் குறித்த ஒரு அறிக்கையை நிதி ஆயோக் அமைப்பு சமர்ப்பித்தது.
  • உள்நாட்டுப் பொருளாதார மதிப்பை உருவாக்குவதில் மேம்படுத்தப் பட்ட வேதி செல் ஆற்றல் சேமிப்பு மீதான உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டத்தின் சாத்தியமானப் பங்கினை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
  • இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் சலுகைகள் முன்னணி மின்கல அடுக்கு உற்பத்தியாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வழி வகுக்கும்.
  • கனரகத் தொழில் துறை மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சகம் ஆனது மேம்படுத்தப் பட்ட வேதியியல் செல் (ACC) ஆற்றல் சேமிப்பு மீதான தேசியத் திட்டத்திற்கான முதன்மை அமைச்சகமாகும்.
  • மேம்பட்ட வேதி செல்களின் உற்பத்தியானது மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை எளிதாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்