மும்பைப் பங்குச் சந்தை மற்றும் தேசியப் பங்குச் சந்தை நிறுவனம் ஆகியவை 500 கோடி ரூபாய்க்கும் குறைவான சந்தை மூலதனத்தைக் கொண்ட நிறுவனங்களுக்காக மேம்படுத்தப் பட்ட கண்காணிப்புச் செயல்முறையை நிறுவியுள்ளன.
குறைவான சந்தை மூலதனத்தைக் கொண்ட பல்வேறு நிறுவனங்களின் பங்குகளின் மதிப்புகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் கண்காணித்து அதைக் கட்டுப்படுத்தவும், சந்தைக்கு உறுதித் தன்மையை வழங்கவும் இந்தச் செயல்முறை ஒரு செயற்கருவியாக இருக்கும்.
மேம்படுத்தப் பட்ட கண்காணிப்பு நடவடிக்கைக் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள பத்திரங்கள் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்குக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.