TNPSC Thervupettagam

மேம்பட்ட இழுவை பீரங்கித் துப்பாக்கி அமைப்பு (ATAGS)

September 16 , 2017 2498 days 800 0
  • உள்நாட்டு தொழில்நுட்பத்தினால் தயாரிக்கப்பட்ட ஏ.டி.ஏ.ஜி.எஸ் எனும் மேம்பட்ட இழுவை பீரங்கித் துப்பாக்கிகள் (Advanced towed Artillery Gun System - ATAGS) 48 கி.மீ தூரமுடைய இலக்குகளை தாக்கி புதிய சாதனையைப் படைத்துள்ளது.
  • தனியார் துறை மற்றும் டி.ஆர்.டி.ஓ எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கூட்டிணைவால் இந்த பீரங்கித் துப்பாக்கி மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • பினாகா எனும் பலகுழல் ஏவுகணை செலுத்திக்கு (Multi Barrel rocket launching System) பின்பற்றப்பட்டது போல் இதன் மேம்பாட்டிற்கும் கூட்டமைப்பு அடிப்படை மாதிரி பின்பற்றப்பட்டுள்ளது (Consortium Based model)
  • 1980’களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட போபர்ஸ் பீரங்கிக்குப் பிறகு, இதுவரை எந்த வித புது துப்பாக்கிகளுடன் கூடிய பீரங்கிகளும் இராணுவத்தில் உட்புகுத்தப்படவில்லை.
  • கடந்த ஆண்டு, 145 M-777 எனும் அதிநவீன – இலகு ஹோவிடைசர் துப்பாக்கிகளை (Ultra-Light Howitzers) வாங்க இந்தியா அமெரிக்காவோடு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்