புது தில்லியின் சாந்தினி சவுக்கில் காற்றின் தரம் மற்றும் கணித்தல் அமைப்பை (SAFAR - Air Quality and Weather Forecast System) மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் முதல் முறையாக அறிமுகப்படுத்தினார்.
மிகப்பெரிய உண்மை நிறத்திலான ஒளி-உமிழ் இருமுனையம் (LED – Light Emitting Diode) காட்சியகமானது அசலான நேரத்தின் காற்றுத் தரக் குறியீட்டை அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும், வண்ணக் குறியீட்டுடன் 72 மணிநேர மேம்பட்ட முன்னறிவிப்புடன் தரவுகளைத் தரும்.
இந்தப் புதிய அமைப்பானது UV-குறியீடு, நுண்துகள்கள் (PM1), பாதரசம் மற்றும் கருங்கரி (Black Carbon) ஆகியவற்றை அசலான நேரத்தில் கண்காணிக்கும். அது தொடர்பான முன்னெச்சரிக்கை மற்றும் சுகாதார ஆலோசனைகள் ஆகியவற்றை இந்த அமைப்பானது அளிக்கும்.
பூனேவில் உள்ள இந்திய வெப்ப மண்டல வானிலையியலுக்கான நிறுவனத்தால் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய வானியல் துறையால் இந்த அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.