TNPSC Thervupettagam

மேம்பட்ட வானிலை முன்னறிவிப்பு

July 24 , 2018 2315 days 749 0
  • புது தில்லியின் சாந்தினி சவுக்கில் காற்றின் தரம் மற்றும் கணித்தல் அமைப்பை (SAFAR - Air Quality and Weather Forecast System) மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் முதல் முறையாக அறிமுகப்படுத்தினார்.
  • மிகப்பெரிய உண்மை நிறத்திலான ஒளி-உமிழ் இருமுனையம் (LED – Light Emitting Diode) காட்சியகமானது அசலான நேரத்தின் காற்றுத் தரக் குறியீட்டை அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும், வண்ணக் குறியீட்டுடன் 72 மணிநேர மேம்பட்ட முன்னறிவிப்புடன் தரவுகளைத் தரும்.
  • இந்தப் புதிய அமைப்பானது UV-குறியீடு, நுண்துகள்கள் (PM1), பாதரசம் மற்றும் கருங்கரி (Black Carbon) ஆகியவற்றை அசலான நேரத்தில் கண்காணிக்கும். அது தொடர்பான முன்னெச்சரிக்கை மற்றும் சுகாதார ஆலோசனைகள் ஆகியவற்றை இந்த அமைப்பானது அளிக்கும்.
  • பூனேவில் உள்ள இந்திய வெப்ப மண்டல வானிலையியலுக்கான நிறுவனத்தால் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய வானியல் துறையால் இந்த அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்