கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மேயர்கள் சமீபத்தில் தங்கள் மேயர் பதவியை ராஜினாமா செய்தனர்.
கோயம்புத்தூர் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது ராஜினாமா கடிதத்தை அதன் மாநகராட்சி ஆணையரிடம் சமர்ப்பித்தார்.
திருநெல்வேலி மேயர் P.M. சரவணன், தனது இராஜினாமா கடிதத்தினை அம்மாநகராட்சியின் ஆணையரிடம் சமர்ப்பித்தார்.
1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் நகர மாநகராட்சிக் கழக சட்டத்தின் 37வது பிரிவின் படி, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பின் மூலம் மேயரின் ராஜினாமாவினை அங்கீகரிக்க சிறப்பு சபைக் கூட்டம் நடத்தப்படும்.
மேயரின் இராஜினாமா ஆனது, கோயம்புத்தூரில் இரண்டாவது முறையாக தனது பதவிக் காலத்தின் நடுவில் ஒருவர் ராஜினாமா செய்ததைக் குறிக்கிறது.
முதன்முதலாக 2014 ஆம் ஆண்டு S.M. வேலுசாமி, மேயர் பதவியில் இருந்து விலகினார்.