நாடு முழுவதும் உள்ள கிராமங்களின் கலாச்சாரச் செழுமையை எடுத்துரைக்கும் நோக்கில் மத்திய அரசு புதிய திட்டத்தினை அறிவித்துள்ளது.
"மேரா கௌன், மேரி தரோஹர்" என்று அழைக்கப்படும் இந்த முன்னெடுப்பு ஆனது, இந்தியக் கிராமங்களின் வாழ்க்கை முறை, வரலாறு மற்றும் நெறிமுறைகளை ஆராய முயல்கிறது.
தேசியக் கலாச்சார வரைபடமாக்கலின் முக்கிய அங்கமாக, நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் பொதிந்துள்ள கலாச்சாரப் பன்முகத் தன்மையை ஆவணப் படுத்தச் செய்வதற்கும் வரைபடமாக்கச் செய்வதற்கும் மத்திய அரசு மேற்கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்த திட்டம் பிரதிபலிக்கிறது.