ஹரியானா மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகமானதுனது (State Council of Educational Research and Training) மேரி இ-புஷ்தக் (Meri-e-Pustak) எனும் புதிய கைபேசி செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது.
ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க digi-LEP (learning enhancement programme -கற்றல் மேம்பாட்டுத் திட்டம்) எனும் டிஜிட்டல் சேவையின் சோதனை பதிவையும் (Test version) இக்கழகம் தொடங்கியுள்ளது.
ஹரியானா மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தின் “Meri-e-Pustak” கைபேசி செயலியை NCERT அமைப்பு அங்கீகரித்துள்ளதனால், தனது மாநிலக் கல்வித்துறையின் மூல ஆதாரங்கள் மற்றும் NCERT-ன் ஆதரவுடன் தனக்கென ஓர் டிஜிட்டல் புத்தக அமைப்பை உருவாக்கியுள்ள முதல் இந்திய மாநிலமாக ஹரியானா உருவாகியுள்ளது .