ஆறு முறை சாம்பியன் பட்டம் வென்ற எம்.சி மேரி கோம் (51 கிலோ) என்பவர் மகளிர் உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் மிக வெற்றிகரமான குத்துச் சண்டை வீரராக தன்னைத் தானே மிஞ்சியுள்ளார்.
இவர் முன் எப்போதும் இல்லாத வகையில் எட்டாவது பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
மூன்றாம் நிலை வீராங்கனையான மேரி கோம் கொலம்பியாவின் வலென்சியா விக்டோரியாவைத் தோற்கடித்தார்.
மஞ்சு ராணி (48 கிலோ), ஜமுனா போரோ (54 கிலோ) ஆகியோரும் இதில் அரையிறுதிப் போட்டியில் நுழைந்துள்ளனர்.