ரோம் திரைப்படத் திருவிழாவில் படத் தயாரிப்பாளரான ராக்கேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவின் திரைப்படமான “மேரே பயாரே பிரைம் மினிஸ்டர்” திரையிடப்பட்டது. ஆசியாவிலிருந்து திரையிடப்பட்ட ஒரே திரைப்படம் இதுவாகும்.
ரோம் திரைப்படத் திருவிழாவின் தேர்வுக் குழுவானது 3 வெவ்வேறு கண்டங்களில் இருந்து 3 படங்களைத் திரையிடத் தேர்வு செய்துள்ளது.
மும்பை சேரிப் பகுதியில் வாழும் நான்கு குழந்தைகளைப் பற்றி இத்திரைப்படம் விவரிக்கிறது. அந்த நான்கு குழந்தைகளில் ஒரு சிறுவன் தனது தாய்க்காக ஒரு கழிவறை அமைக்க எண்ணுகிறான். அதற்காக பிரதமருக்கு அச்சிறுவன் மனு கொடுக்கின்றான்.