இமாச்சலப் பிரதேசத்தின் மாநிலப் பறவையான மேற்கத்திய ட்ராகோபன் (ட்ராகோபன்- மெலானோசெபாலஸ்) இந்தியாவின் சில பகுதிகளில் அதன் வாழ்விட இழப்பை எதிர்கொண்டு வருகின்றன.
ஆனால் அதிகாரிகளின் முயற்சியால், மாநிலத்தின் சரஹான் ஃபெசன்ட்ரி எனப்படும் வளங்காப்பு இனப்பெருக்க மையத்தில் இந்த இனத்தின் எண்ணிக்கையில் படிப் படியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளில் அதன் எண்ணிக்கையில் சீரான வகையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பறவை வடமேற்கு இமயமலையில், வடக்குப் பாகிஸ்தானிலிருந்து (சிந்து-கோஹிஸ்தான் மாவட்டம்) காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்டின் மேற்குப் பகுதிகள் ஆகியவற்றினை உள்ளடக்கிய இந்தியப் பகுதிகள் வரை பரவிக் காணப் படுகின்றன.