TNPSC Thervupettagam

மேற்கு ஆசிய அமைதித் திட்டம்

February 1 , 2020 1667 days 833 0
  • சமீபத்தில் மேற்கு ஆசிய அமைதித் திட்டமானது அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் வெளியிடப்பட்டது.
  • இது இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் நிறுத்தப்பட்ட இரு நாட்டுப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடரத் திட்டமிட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் படி
    • ஜெருசலேம் ஒன்றிணைந்ததாகவும் இஸ்ரேலின் தலைநகராகவும் இருக்க வேண்டும்.
    • மேற்குக் கரையில் இஸ்ரேல் தனது சட்டவிரோத குடியேற்றங்கள் எதையும் அகற்றக் கூடாது.
    • 1967 ஆம் ஆண்டுப் போரில் இஸ்ரேல் நாட்டினால் கைப்பற்றப்பட்ட நகரத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஜெருசலேமின் கோயிலான மவுண்ட் / அல் - ஹராம் அல் - ஷெரீப் வளாகத்தைப் பாதுகாக்கப்பட வேண்டும்.
    • இணைக்கப்படாத மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனிய பிரதேசங்கள் மற்றும் காசா ஆகியவற்றிற்கு இடையே போக்குவரத்து இணைப்புகள் நிறுவப்பட வேண்டும்.
    • பாலஸ்தீனிய மற்றும் அண்டை அரபு அரசு பொருளாதாரங்களை வலுப்படுத்துவதற்காக 50 பில்லியன் டாலர் முதலீட்டு நிதி உருவாக்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்