4.5% கட்டமைப்புகளின் பரப்பு அதிகரிப்பு மற்றும் 9% வேளாண் பகுதியின் அதிகரிப்பு ஆகியவற்றினால் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பசுமைமாறாக் காடுகளின் 5% இழப்பு பதிவாகியுள்ளது.
இது 36 உலகப் பல்லுயிர் பெருக்க மையங்களில் ஒன்றாகும்.
இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் எரிசக்தி மற்றும் ஈரநில ஆராய்ச்சிக் குழுவானது, மேற்குத் தொடர்ச்சி மலையின் இடஞ்சார்ந்த முடிவு எடுத்தலுக்கான தகவல் வழங்கீட்டு அமைப்பினை (WGSDSS) அறிமுகப்படுத்தியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது.
கட்டமைப்பு வாரியான பகுப்பாய்வு ஆனது ESR-1 (சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதி) பகுதியின் கீழ் 32% பகுதி காணப்படுவதாகக் குறிப்பிடுவதோடு, இது மிகவும் அதிகப் படியான சுற்றுச்சூழல் பலவீனத்தைக் குறிக்கிறது.
இந்தக் கட்டமைப்பின் கீழ் உள்ள ESR-1 ஆக மாறக் கூடிய வகையிலான 16% (373) பகுதிகள் ESR-2 பகுதியின் கீழ் உள்ளன.
ESR-3 மற்றும் 4 பகுதியின் கீழ் முறையே 34% (789) மற்றும் 18% (412) பகுதிகள் உள்ளன.