TNPSC Thervupettagam

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனப்பரவல்

July 19 , 2023 367 days 251 0
  • 4.5% கட்டமைப்புகளின் பரப்பு அதிகரிப்பு மற்றும் 9% வேளாண் பகுதியின் அதிகரிப்பு ஆகியவற்றினால் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பசுமைமாறாக் காடுகளின் 5% இழப்பு பதிவாகியுள்ளது.
  • இது 36 உலகப் பல்லுயிர் பெருக்க மையங்களில் ஒன்றாகும்.
  • இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் எரிசக்தி மற்றும் ஈரநில ஆராய்ச்சிக் குழுவானது, மேற்குத் தொடர்ச்சி மலையின் இடஞ்சார்ந்த முடிவு எடுத்தலுக்கான தகவல் வழங்கீட்டு அமைப்பினை (WGSDSS) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மேற்குத் தொடர்ச்சி மலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • கட்டமைப்பு வாரியான பகுப்பாய்வு ஆனது ESR-1 (சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதி) பகுதியின் கீழ் 32% பகுதி காணப்படுவதாகக் குறிப்பிடுவதோடு, இது மிகவும் அதிகப் படியான சுற்றுச்சூழல் பலவீனத்தைக் குறிக்கிறது.
  • இந்தக் கட்டமைப்பின் கீழ் உள்ள ESR-1 ஆக மாறக் கூடிய வகையிலான 16% (373) பகுதிகள் ESR-2 பகுதியின் கீழ் உள்ளன.
  • ESR-3 மற்றும் 4 பகுதியின் கீழ் முறையே 34% (789) மற்றும் 18% (412) பகுதிகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்