மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-கின் தலைமையின் கீழ் குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் மேற்கு மண்டல குழுவின் (Western Zonal Council) 23-வது சந்திப்பு நடைபெற்றுள்ளது.
மண்டல குழுக்களானது 1956-ஆம் ஆண்டின் மாநிலங்கள் மறுச் சீரமைப்புச் சட்டத்தின் படி (States Reorganization Act, 1956) உருவாக்கப்பட்ட சட்ட அமைப்பாகும் (statutory body). இது ஓர் அரசியலமைப்பு அமைப்பல்ல.
மாநிலங்களிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதற்காகவும், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதற்காகவும் மண்டல குழுக்கள் உருவாக்கப்பட்டன.
தற்சமயம், நடப்பில் மொத்தம் 5 மண்டல மண்டல குழுக்கள் உள்ளன.
அவையாவன
வடக்கு மண்டல குழு
மேற்கு மண்டல குழு
மத்திய மண்டல குழு
தெற்கு மண்டல குழு
கிழக்கு மண்டல குழு
மண்டல குழுக்கள் அரசியற்சட்ட அமைப்புகள் (constitutional bodies) அல்ல. இவை மத்திய உள்துறை அமைச்சரை (Union Home minister) தலைவராகக் கொண்ட விளக்கப் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை நல்கு (only deliberative and advisory bodies) அமைப்பு மட்டுமே ஆகும்.
வடகிழக்கு மாநிலங்கள் இந்த ஐந்து மண்டல குழுக்களில் உள்ளடக்கப்படவில்லை.
1972 – ஆம் ஆண்டின் வடகிழக்கு கவுன்சில் சட்டத்தின் (North Eastern Council Act, 1972) கீழ் உருவாக்கப்பட்ட வடகிழக்கு கவுன்சிலினால் (North Eastern Council) வடகிழக்கு மாநிலங்களின் குறிப்பிட்ட பிரச்சனைகள் களையப்படுகின்றன.