மேற்கு வங்காள மாநில அரசு ஆனது, அம்மாநிலத்தில் உள்ள இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (OBC) அடையாளம் காண்பதற்காக ஒரு புதியக் கணக்கெடுப்பை நடத்த உள்ளது.
2010 மற்றும் 2012 ஆகிய இரு ஆண்டுகளுக்கு இடையில், 75 முஸ்லிம் சமூகத்தினை உள்ளடக்கிய 77 சமூகங்களை அம்மாநில அரசு இப்பட்டியலில் சேர்த்துள்ளது.
இந்தச் சேர்க்கை தொடர்பான சில பிரச்சினைகள் கல்கத்தா உயர் நீதிமன்றம் முன் வைக்கப் பட்டதோடு 2024 ஆம் ஆண்டில் அங்கு உயர் நீதிமன்றமானது இந்தச் சேர்க்கையினை ரத்து செய்தது.
2012 ஆம் ஆண்டு மேற்கு வங்காளப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பட்டியலிடப்பட்டச் சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் (அரசுப் பணிகள் மற்றும் பதவிகளில் காலியிடங்களை ஒதுக்குதல்) சட்டத்தின் சில பகுதிகளையும் நீதிமன்றம் ரத்து செய்தது.