மேற்கு வங்காளத்தின் மும்மை நோய் நீக்க முன்னெடுப்பு
April 8 , 2025 5 days 97 0
மேற்கு வங்காள மாநிலம் வில்லியம் J. கிளிண்டன் அறக்கட்டளை (WJCF) மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து 'மும்முனை நீக்க' முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
இது நாட்டிலேயே இவ்வகையிலான முதல் வகை முன்னெடுப்பு என்று நம்பப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்குள் எச்.ஐ.வி, சிபிலிஸ் மற்றும் ஹெபடைடிஸ் B (கல்லீரல் அழற்சி) ஆகிய நோய்கள் தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவுவதை ஒழிப்பதே இதன் நோக்கம் ஆகும்.
எச்.ஐ.வி, சிபிலிஸ் மற்றும் ஹெபடைடிஸ் B ஆகிய மூன்று நோய்களும் தொற்றுநோய் ஆகும் என்பதோடு அவற்றின் பரவும் ஒரு முறையானது, பாலியல் மற்றும் செங்குத்து (தாயிடமிருந்து குழந்தைக்கு) பரவுதல் அடிப்படையில் ஒத்திருக்கிறது.