மேற்கு வங்காள மாநில அரசானது, அதன் ஏழு மாநிலத் தயாரிப்புகளுக்குப் புவிசார் குறியீடுகளைப் பெற்றுள்ளது என்ற ஒரு நிலையில் அவற்றில் அதன் ஒரு அடையாளச் சின்னமான 'நோலன் குரேர் சந்தேஷ்' மற்றும் பருய்ப்பூர் கொய்யா ஆகியவையும் அடங்கும்.
இதன் மற்ற ஐந்து பொருட்கள், கமர்ப்புக்கூரின் வெள்ளை 'போண்டே' இனிப்பு வகை, முர்ஷிதாபாத்தின் 'சானாபோரா' இனிப்பு வகை, பிஷ்ணுபூரின் 'மோதிச்சூர் லட்டு', ராதுனிபகல் அரிசி மற்றும் மால்டாவின் நிஸ்டாரி பட்டு நூல் ஆகியனவாகும்.
அம்மாநில அரசானது, கைவினைப்பொருட்கள், ஜவுளி, தேநீர், உணவுப் பொருட்கள் மற்றும் கலை பொருட்கள் உட்பட சுமார் 26 இதரப் பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடுகளைப் பெற்றுள்ளது.