மேற்கு வங்காளத்திற்கு அளிக்கவிருக்கும் கடனுக்கு ஒப்புதல் - ADB
August 31 , 2018 2371 days 708 0
மேற்கு வங்காளத்தில் ஆர்செனிக், புளோரைடு மற்றும் உப்புத் தன்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று மாவட்டங்களில் உள்ள பத்து லட்சம் மக்களுக்கு பாதுகாப்பான, நீடித்த குடிநீர் சேவை அளிப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த 245 மில்லியன் மதிப்புடைய கடன் தொகையை வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டம் ஆர்செனிக் மற்றும் புளோரைடுகளினால் ஏற்படும் நோய்களின் தாக்கத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது மற்றும் பருவநிலை மாற்றத் தாங்கு தன்மை அதிகரிக்கிறது.
பூர்பா மெதினிபூர், பன்குரா மற்றும் வடக்கு 24 பர்கானா ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 3,90,000 குடும்பங்களுக்கு மீட்டர் இணைப்பின் மூலமாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் இத்திட்டத்தின்படி வழங்கப்படும்.