TNPSC Thervupettagam

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் புதிய பெருஞ்சிலந்தி இனங்கள்

January 21 , 2025 6 hrs 0 min 18 0
  • இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில், ஒரு புதிய பேரினம் உட்பட நான்கு புதிய வகை பெருஞ்சிலந்தி இனங்களை/டரான்டுலாக்களை ஆராய்ச்சியாளர் ஒருவர் விவரித்துள்ளார்.
  • சிலந்திக்கான தமிழ்ச் சொல்லினைக் கொண்டு பெயரிடப்பட்ட சிலந்திகா எனப்படும் டரான்டுலா முற்றிலும் புதிய வகையாகும்.
  • ஹாப்லோக்ளாஸ்டஸ் பிராட்டோகொலோனஸ் ("மரத்தில் வசிக்கும் இனம்" என்று பொருள்படும்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இரண்டாவது புதிய இனம் ஆனது, ஆறுகளின் ஓரங்களில் உள்ள உள் வெற்றிடம் கொண்ட மரங்களில் வசிப்பிடங்களை உருவாக்குகின்றது.
  • மற்றொரு இனமான ஹாப்லோக்ளாஸ்டஸ் மொன்டனஸ், மலைக் காடுகளில் 2,000 மீட்டர் (6,600 அடி) க்கும் அதிகமான உயரத்தில் வாழ்வது கண்டறியப்பட்டது.
  • இது இப்பகுதியில் அறியப்பட்ட மிக உயரமான இடத்தில் வாழும் டரான்டுலாக்களில் ஒன்றாகும்.
  • சுமார் 1,264 காற்றை சுவாசிக்கும் எண்காலி இனங்கள் தற்போது உலகளவில் சட்ட விரோதமாக வர்த்தகம் செய்யப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்