மேற்கூரை சூரிய மின்னாற்றல் உற்பத்தி அமைப்புகளின் பங்கு – தமிழ்நாடு
January 26 , 2025 11 hrs 0 min 40 0
மேற்கூரை சூரிய மின்னாற்றல் உற்பத்தி மைப்புகளில் இருந்து உற்பத்தி செய்யப் படும் மின்சாரத்தின் பங்கு என்பது தமிழ்நாட்டின் மொத்த மின்சார ஆற்றலில் வெறும் 1% மட்டுமேயாகும்.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டின் மொத்த நிறுவப் பட்ட மின்னாற்றல் திறன் 41,741.45 மெகாவாட்டாக இருந்தது.
இதில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 24,323.42 மெகாவாட் ஆகும்.
குஜராத்தின் மொத்த மின்சார ஆற்றல் உற்பத்தியில் மேற்கூரை சூரிய மின்னாற்றல் உற்பத்தி 5%, மகாராஷ்டிராவில் 2%, கர்நாடகாவில் 1% மற்றும் கேரளாவில் 5% ஆக உள்ளது.