TNPSC Thervupettagam

மேலவைத் தேர்தலில் நோட்டா வசதி நீக்கம்

August 23 , 2018 2291 days 705 0
  • மேலவைத் தேர்தலில் நோட்டா (மேற்கூறியவற்றில் எதுவுமில்லை) வசதியை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் இது மறைமுக தேர்தலில் நியாயத்தை தோற்கடித்து ஜனநாயக மதிப்பீடுகளை அழிக்கிறது எனக் கூறியுள்ளது.
  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, A.M. கான்வில்கர் மற்றும்V. சந்திரசௌத் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • இது ஜூன் 2014ல் வெளியிடப்பட்ட மேலவைத் தேர்தலில் நோட்டா விருப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை ரத்து செய்துள்ளது.
  • 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பினைத் தொடர்ந்து நோட்டா வசதியானது மக்களவைத் தேர்தலில் (நேரடி தேர்தல்) இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இது ஜனவரி 2014ல் வெளியிடப்பட்ட அறிவிப்பு வழியாக மேலவைத் தேர்தலுக்கும் (மறைமுக தேர்தல்) விரிவுபடுத்தப்பட்டது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்