மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரான பிரகாஷ் ஜவ்டேகர் அவர்கள் நாட்டில் உள்ள 146 தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்குச் சரணாலயங்கள் மீதான மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் மேற்கொள்ளப்படும் இதே வகையைச் சேர்ந்த முதலாவது அறிக்கை இது ஆகும்.
தற்பொழுது இந்தியாவானது நாட்டின் மொத்தப் புவிப் பரப்பில் 5% பரப்பினை உள்ளடக்கக் கூடிய வகையில் 903 பாதுகாக்கப்பட்ட பகுதிகளைக் கொண்ட ஒரு வலையமைப்பினைக் கொண்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் ஜல்தாபாரா தேசியப் பூங்கா மற்றும் ராய்கன்ஞ் வனவிலங்குச் சரணாலயம், இமாச்சலப் பிரதேசத்தின் பெரும் இமயமலை தேசியப் பூங்கா, தீர்த்தன் வனவிலங்குச் சரணாலயம் மற்றும் சாய்ஞ் வனவிலங்குச் சரணாலயம் ஆகியவை இந்தியாவில் உள்ள முதன்மையான 5 தேசியப் பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் ஆகும்.
உத்தரப் பிரதேசத்தின் ஆமைகள் வனவிலங்குச் சரணாலயம் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ஜெய் பிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயம் ஆகியவை கடைசி இடங்களில் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளன.