TNPSC Thervupettagam

மேலும் ஆறு மாதங்களுக்கு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்

September 4 , 2017 2509 days 886 0
அசாம் மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (Armed Forces (Special Powers) Acts  - AFSPA) மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அசாம் மாநிலமும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதி (‘Disturbed Area’) என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் பிரிவு 3 இன் கீழ் இந்த உத்தரவு மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் உள்ளது. உல்பா புரட்சியாளர்களின் (United Liberation Front of Asom - ULFA) பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது . தற்சமயம் , ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கும் மாநிலங்கள் :
  • அருணாசலப் பிரதேசம்
  • அஸ்ஸாம்
  • மணிப்பூர்
  • மேகாலயா
  • மிசோரம்
  • நாகலாந்து
  • ஜம்மு காஷ்மீர்
திரிபுரா மாநிலத்தில் மே மாதம் 2015 இல் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் விலக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்