TNPSC Thervupettagam

மேல் (உயர்) நிலை ராக்கெட் என்ஜினின் சோதனை ஓட்டம்

August 16 , 2020 1566 days 596 0
  • இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் ஆனது ராமன்என்ற மேல் நிலை ராக்கெட் என்ஜினை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது.
  • இது நோபல் பரிசை வென்றவரான சர் சி.வி. ராமன் என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்ட, இந்தியாவின் முதலாவது 100% முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட முன்னோக்கிச் செல்லும் நிலையிலான இருநிலை கொண்ட திரவ ராக்கெட் என்ஜின் செலுத்தியாகும் (3D printed bi-propellant liquid rocket engine injector).
  • இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட ராக்கெட் என்ஜினை சோதனை செய்யும் இந்தியாவின் முதலாவது தனியார் விண்வெளி நிறுவனம் இதுவாகும்.
  • ராமன் என்பது குறைந்த எண்ணிக்கையிலான இயங்கும் பாகங்களைக் கொண்ட ஒரு இலகுரக முப்பரிமாண அச்சிடப்பட்ட ராக்கெட் என்ஜினாகும்.
  • இது 250 முதல் 700 கிலோ கிராம் எடையுள்ள செயற்கைக் கோளைக் குறைந்த (தாழ்) சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்