நிதி அமைச்சகமானது 2023 ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பணி நியமனம் மற்றும் நிபந்தனைகள்) விதிகளை வெளியிட்டுள்ளது.
இது தீர்ப்பாயத்தின் முக்கியப் பணியாளர்களின் தேர்வு, பதவிக் காலம் மற்றும் பலன்களுக்கான ஒரு கட்டமைப்பினை வழங்குகிறது.
இந்த விதிகள் சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு மற்றும் மாநில அமர்வுகளின் தலைவர், நீதித்துறை உறுப்பினர், தொழில்நுட்ப உறுப்பினர் (மத்திய) மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் (மாநிலம்) ஆகியோருக்குப் பொருந்தும்.
இந்தத் தீர்ப்பாயங்களின் தலைவர் பதவிக்கான அதிகபட்ச வயது வரம்பு 70 ஆகவும், அதே நேரத்தில் உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 67 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
நிதி அமைச்சகம் ஆனது முன்னதாக சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் 31 அமர்வுகளை நிறுவ உள்ளதாக அறிவித்தது.