TNPSC Thervupettagam

மேல்முறையீட்டுத் தீர்ப்பாய விதிகள் 2023

October 30 , 2023 265 days 157 0
  • நிதி அமைச்சகமானது 2023 ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பணி நியமனம் மற்றும் நிபந்தனைகள்) விதிகளை வெளியிட்டுள்ளது.
  • இது தீர்ப்பாயத்தின் முக்கியப் பணியாளர்களின் தேர்வு, பதவிக் காலம் மற்றும் பலன்களுக்கான ஒரு கட்டமைப்பினை வழங்குகிறது.
  • இந்த விதிகள் சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு மற்றும் மாநில அமர்வுகளின் தலைவர், நீதித்துறை உறுப்பினர், தொழில்நுட்ப உறுப்பினர் (மத்திய) மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் (மாநிலம்) ஆகியோருக்குப் பொருந்தும்.
  • இந்தத் தீர்ப்பாயங்களின் தலைவர் பதவிக்கான அதிகபட்ச வயது வரம்பு 70 ஆகவும், அதே நேரத்தில் உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 67 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
  • நிதி அமைச்சகம் ஆனது முன்னதாக சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் 31 அமர்வுகளை நிறுவ உள்ளதாக அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்