மை பாஸ்ட் டேக் (MyFASTag ) மற்றும் பாஸ்ட் டேக் பார்ட்னர் ( FASTag Partner ) செயலிகள்
August 19 , 2017 2686 days 1267 0
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் MyFASTag மற்றும் FASTag பார்ட்னர் எனும் இரண்டு மொபைல் செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலிகளைப் பயன்படுத்தி மின்னணு முறையில் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த முடியும்.
அக்டோபர் 1, 2017 முதல் நாட்டிலுள்ள மொத்த 371 சுங்கசாவடிகளின், அனைத்து வழித்தடங்களிலும் பாஸ்ட் டேக் கட்டண முறை செயல்படுத்தப்படும். பாஸ்ட் டேக் முறையில் மட்டுமே கட்டணம் செலுத்தும் விதமாக பிரத்யேகமாக ஒரு பாதையும் ஒதுக்கப்படும்.
மின்னணு சுங்கச்சாவடிகட்டணம்
சுங்கசாவடி ஊழியர்கள் இல்லாமல் நெடுஞ்சாலை சுங்கக் கட்டணத்தை மின்னணு முறையில் வசூலிக்கும் முறை ETC (Electronic Toll Collection ) எனப்படும்.
ETC முறையில் வாகனத்திற்கும், சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நிறுவனத்திற்கும் இடையில் ஒரு மின்னணு முறையில் பண பரிவர்த்தனை நிகழும்.
மை பாஸ்ட் டேக்
பாஸ்ட் டேக் பட்டை பொருத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் சுங்கச்சாவடிகளை கடக்கும் பொழுது , பட்டையோடு பதிவு செய்யப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிடித்தம் செய்துக் கொள்ளப்படும். கையில் பணம் செலுத்தி கடவுச்சீட்டு பெற அவசியம் இருக்காது.
பாஸ்ட் டேக் பார்ட்நர்
பாஸ்ட் டேக் பார்ட்னர் என்பது பாஸ்ட் டாக் பட்டைகளை விற்பனை செய்யும் வங்கிகள் மற்றும் முகவர்களுக்கான செயலி ஆகும் . சுமார் பத்து வங்கிகள் மற்றும் கைபேசி பண உறை (Mobile Wallet) முகவர்கள் பாஸ்ட் டேக் பட்டைகளை விற்பனை செய்கின்றனர்.