மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிரைன்வேவ் தொழில்நுட்பம்
August 26 , 2017 2646 days 900 0
மைக்ரோசாப்ட் நிறுவனம் ‘பிரைன்வேவ்’ (Brainwave) என்ற நிகழ்நேர செயற்கை நுண்ணறிவு அமைப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த நுண்ணறிவு தொழில்நுட்பம் தரவுகள் பெறப்பட்டதும் , செயலாக்கங்களை விரைவாக செய்து முடிக்கின்றது . மிகக் குறைவான தாமதத்துடன் (ultra-low latency) செயல்களை நிறைவு செய்கின்றது.
நிகழ் நேர செயற்கை நுண்ணறிவு அமைப்பு என்பது நிகழ்நேர தரவுப் பெயர்ச்சி , தேடல் வினவல்கள் மற்றும் பயனர்களுடனான உடனடித் தொடர்புக்கு பெரிதும் உதவுவதால் சமீப காலத்தில் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு என்பது காட்சி உணர்தல் , பேச்சுக் கண்டறிதல் , முடிவெடுக்கும் திறன் , மொழிகளுக்கு இடையே மொழிபெயர்ப்பது போன்ற மனித நுண்ணறிவு தேவைப்படும் பணிகளை கணினிகள் செய்யக்கூடிய வகையில் அமைப்புகள் மற்றும் கோட்பாடுகளை உருவாக்குவது ஆகும்.