உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க சில தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனமானது, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 04 ஆம் தேதியன்று அதன் 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
இது 1975 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ நகரில் பில் கேட்ஸ் மற்றும் பால் ஆலன் ஆகியோரால் நிறுவப்பட்டது.
விண்டோஸ் 1.0 என்பது 1985 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் விண்டோஸ் நிறுவனம் வெளியிட்ட முதல் பெரிய இயங்குதளம் ஆகும்.
வேர்டு, பவர்பாயிண்ட் மற்றும் எக்செல் ஆகியவற்றைக் கொண்ட மைக்ரோசாப்ட் ஆபிஸ் 1989 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மைக்ரோசாப்ட் வலை தள உலாவியான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், முதன்முதலில் 1995 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளம் 2001 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
அதன் விண்டோஸ் 7 ஆனது 2009 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டது.
கூகுள் சர்ச் எனும் தேடுபொறியுடன் போட்டியிடும் விதமாக மைக்ரோசாப்ட் நிறுவனம் 2009 ஆம் ஆண்டில் பிங் எனும் தேடுபொறியை அறிமுகப் படுத்தியது.