மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்
June 17 , 2022
893 days
428
- மைக்ரோசாப்ட் நிறுவனமானது, அதன் 27 ஆண்டு கால இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் செயல்பாட்டினை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
- அந்த நிறுவனத்தின் பழமையான இந்த உலாவி ஜூன் 15 முதல் முற்றிலும் நிறுத்தப் படும்.
- மைக்ரோசாப்ட் நிறுவனமானது 1995 ஆம் ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் முதல் பதிப்பை விண்டோஸ் 95 இயங்கு மென்பொருளுக்கான கூடுதல் தொகுப்பாக வெளியிட்டது.
- இணைய உலாவலின் பழமையான சகாப்தத்தில் முதன்முதலில் பரவலாக பிரபலமாக காணப்பட்ட நெட்ஸ்கேப் நேவிகேட்டர் என்ற உலாவியே ஆதிக்கம் செலுத்தியது.
- மைக்ரோசாப்ட் எட்ஜ் உலாவியானது 2016 ஆம் ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியினை அந்நிறுவனத்தின் விருப்பமான உலாவியாக மாற்றியது.
Post Views:
428