வாகனத் திருட்டுகளைப் பற்றி அறிவதற்கு உதவும் புதிய மைக்ரோடாட் தொழில்நுட்பத்தின் தொடக்கத்தினை இந்திய அரசு அறிவித்துள்ளது.
இதன் கீழ், வாகனத்தின் என்ஜின் உட்பட்ட முழுப் பகுதியிலும் லேசர் பொறிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சிறிய புள்ளிகள் வாகனம் முழுவதும் வாகன அடையாள எண்ணுடன் தெளிக்கப்படும்.
இந்த தொழில்நுட்பம் உயர்ந்த உந்தூர்தி தொழில்நுட்ப தகுதிநிலை அமைப்பான மத்திய மோட்டார் வாகன விதிகள் தொழில்நுட்ப நிலைக்குழுவின் (Central Motor Vehicles Rules - Technical Standing Committee - CMVR - TSC) அனுமதியினை பெற உள்ளது.