TNPSC Thervupettagam

மைக்ரோஹைலா கோடியல்

May 19 , 2018 2253 days 735 0
  • மைக்ரோஹைலா கோடியல்/அகன்ற வாயுடைய மங்களூரு தவளை எனப் பெயரிடப்பட்ட புதிய தவளையினத்தை கர்நாடக மாநிலத்தின் கடற்பகுதியிலுள்ள சிறிய தொழிலக மண்டலத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
  • இத்தவளையினத்திற்கு, மங்களூரு நகரத்தின் பெயர் கொண்டு மைக்ரோஹைலா கோடியல் எனப் பெயரிடப்படுகின்றது. இங்கு தான் இரண்டாண்டுகளுக்கு முன் இவ்வகை உயிரினம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • கொங்கன் மொழியில் மங்களூருவிற்கு கோடியல் என்று பெயர்.
  • இவ்வகை தவளையினம், சிறிய தொழிலக மண்டலத்தில் மட்டுமே காணப்படுகிறது. இப்பகுதியானது, இதற்கு முன்னர் மரப்பொருட்கள் குவித்து வைக்கும் இடமாக செயல்பட்டது.

  • இப்பகுதி, துறைமுகம், பெட்ரோ கெமிக்கல், வேதிப்பொருள் மற்றும் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகளால் சூழப்பட்டுள்ளது.
  • மங்களூரு குறுகிய வாயுடைய தவளை, மைக்ரோஹைலா ஜீனஸ் இனத்தைச் சார்ந்தது. இவை பெரும்பாலும் தெற்காசியாவில் காணப்படுகின்றன.
  • இத்தவளைகள், சாம்பல்-அரக்கு நிறம் மற்றும் அடர் ஆலிவ் பச்சை நிறத்தை அதன் தலையிலும் மங்கலான அடர் பச்சை நிறத்தை அதன் உடலின் மற்ற பகுதிகளிலும் கொண்டுள்ளது.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்