ஆறுகளின் குறுக்கே புதிய பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து மைசூர் மற்றும் மதராஸ் மாநிலங்களுக்கிடையே (தற்போதைய கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு) 1892 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
இதன் படி, ஒரு புதிய நீர்த்தேக்கம் அல்லது ஒரு அணையை மைசூரு அரசு கட்ட விரும்பினால், அதன் முழுத் திட்டத்தையும் சென்னை அரசுக்கு அனுப்பி அதன் ஒப்புதலைப் பணி தொடங்குவதற்கு முன்பே பெற வேண்டும்.
அதே சமயம், தனது உரிமையைப் பாதுகாப்பதற்குத் தவிர வேறு எந்த ஒரு காரணத்திற்காகவும் ஒப்புதல் அளிக்க சென்னை அரசு மறுக்கக் கூடாது.