இந்தியா சமீபத்தில் மையப்படுத்தப்பட்ட ஆய்வக வலையமைப்பில் (CLN) இணைந்து உள்ளது.
இது தற்போது 13 நாடுகளில் உள்ள 15 பங்குதார ஆய்வக மையங்களைக் கொண்டு உள்ள நிலையில், அவை பெருந்தொற்று மற்றும் தொற்றுநோய் பரவும் காலங்களில் பயன்படுத்தக் கூடிய தடுப்பு மருந்துகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபடச் செய்கின்றன.
மையப்படுத்தப்பட்ட ஆய்வக வலையமைப்பு என்பது தொற்றுநோய்க்கான ஒரு தயார் நிலைப் புத்தாக்கக் கூட்டணியின் (CEPI) ஒரு பகுதியாகும்.
இந்த வலையமைப்பானது, சோதனைச் செயல்முறைகளுக்கான தரப்படுத்தப்பட்ட முறைகள் மற்றும் அமைப்புகளைக் கொண்ட ஒரு மிகப்பெரிய உலகளாவியக் குழு ஆகும்.