புனேவில் உள்ள “மைலேப்” (Mylab) என்ற மருத்துவச் சோதனைகளுக்கான உற்பத்தி நிறுவனமானது கோவிட் – 19 சோதனைக்கான உபகரணங்களின் விற்பனைக்காக மத்திய மருந்துத் தரநிர்ணயக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் (CDSCO - Central Drugs Standard Control Organization) வணிக ரீதியிலான ஒப்புதலைப் பெற்ற முதலாவது இந்திய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்தச் சோதனை முறையானது புனேவில் உள்ள தேசிய நச்சுயிரியியல் நிறுவனத்தினால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
இது இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டத் முதல் சோதனைக் கருவி ஆகும். இதற்கு மத்திய மருந்துத் தரநிர்ணயக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வர்த்தக ரீதியாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த உபகரணங்கள் தலைகீழ் குறிமுறை பதிப்பு பல்பழம்நொதித் தொடர் வினையை அடிப்படையாகக் கொண்டதாகும்.
ஒரு ஒற்றை உபகரணமானது 100 மாதிரிகளைச் சோதனை செய்யும் திறன் கொண்டதாகும்.
தற்பொழுதுள்ள ஆய்வகச் சோதனை முறையில் கோவிட் – 19க்கான சோதனை நேரமானது 4 மணி நேரமாகும்.
இருப்பினும், மைலேப்பின் சோதனை நேரமானது இரண்டரை மணி நேரமாகும்.
இந்த ஆய்வகமானது இந்த உபகரணங்களை ஒவ்வொரு சோதனைக்கும் ரூ.1200 முதல் ரூ.1500 வரையிலான வரம்பு நிலையில் விற்பனை செய்ய இருக்கின்றது.
தற்பொழுது, இந்திய அரசானது கோவிட் – 19 சோதனைக்கான விலையை ரூ.4500 ஆக நிர்ணயித்துள்ளது.