பழைய அகமதாபாத் நகரில் மொட்டை மாடி வாடகை என்ற கருத்தாக்கம் ஆனது சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
உத்தராயண (மகர சங்கராந்தி) பண்டிகையின் போது இந்தப் பகுதி மொட்டை மாடிச் சுற்றுலாவின் மையமாக மாறியுள்ளது.
இது சுற்றுலாப் பயணிகளுக்குப் பட்டம் பறக்கவிடுதல் மற்றும் பிற இதர சுற்றுலாச் செயல்பாடுகளுக்கானப் பிரத்தியேக இடங்களை வழங்குவதற்காக குடியிருப்புகளின் மொட்டை மாடிகளை வாடகைக்கு விடும் நடைமுறையினைக் குறிக்கிறது.